/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/135_35.jpg)
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. மேலும் பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனித்துள்ளார். இப்படம் இன்று (02.08.2024) முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் விஜய்மில்டன், படத்தில் ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடவீடியோதனக்குத்தெரியாமல் இணைத்துவிட்டார்கள் என்றும் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும்அதிர்ச்சியூட்டும்தகவலைபகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசி வெளியிட்ட வீடியோவில், “பொதுவாகபடம்ரிலீஸ்ஆகும் தேதியில், வெளியூர் சென்றுவிடுவேன். ஆனால்இப்படத்தைபத்திரிக்கையாளர்களோடு பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இந்த படத்தில்ஹீரோயார்?, அவன்எங்கியிருந்துவந்திருக்கிறான், அவன்ரௌடியா, அடி ஆளா,டாக்டராஎன்ற கேள்வியைமுன்வைத்துத்தான் இந்த கதையைபண்ணியிருந்தேன். அதாவது மர்மமான முறையில் ஒருவன் வருகிறான், அவனுக்குஅடிப்பட்டிருக்கு, அந்த அடி ஏன்பட்டிருக்கு, அவன் பின்னாடி யார் இருக்கா, அவன் கூட வர சரத்குமார்யாரு,இவனுக்குப்பின்னாடி என்ன கதைஇருக்குஎனநிறையக்கேள்விகளைக்கொண்டு இந்த படத்தின்ஸ்கிரிப்ட்எழுதியிருந்தேன்.
ஆனால் படம் பார்க்கும் போது எனக்கேஷாக்காகிவிட்டது. பட ஆரம்பத்தில் ஒரு நிமிடத்திற்கு ஒரு ஃபுட்டேஜ்இருக்கிறது. அதை நான் வைக்கவில்லை. அது எப்படி வந்தது என்றும் எனக்குத்தெரியவில்லை. அந்த 1 நிமிடவீடியோவில்ஹீரோயார், எங்கிருந்து வருகிறான், அவனுக்குப்பின்னால் யார் இருக்கிறார் என எல்லாத்தையுமே சொல்லிவிடுகிறார்கள். இப்படிசெய்தால் எப்படி அந்தபடத்தைப்பார்க்க முடியும்.இதற்காகவாஇவ்ளோகஷ்டப்பட்டு எடுத்தோம்.சென்சார்பண்ணபடத்தில் ஒரு நிமிட வீடியோவைசேர்க்கும் உரிமையை யார் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை. இயக்குநரைக்கேட்காமல் இது நடந்திருக்கிறது. உங்களிடம் நான் ஒரு கோரிக்கை வைத்துக்கொள்கிறேன். தயவு செய்து அந்த ஒரு நிமிடவீடியோவைமறந்துவிட்டு இந்தப்படத்தைப்பாருங்கள். நிச்சயம் உங்களை ரசிக்க வைக்கும்” என்றார். இது தற்போது கோலிவுட்டில்பரபரப்பைக்கிளப்பிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)